கோஹ்லி மீது புகார் | ஜூலை 05, 2020

தினமலர்  தினமலர்
கோஹ்லி மீது புகார் | ஜூலை 05, 2020

புதுடில்லி: கோஹ்லி மீது, ஆதாயம் தரும் இரட்டை பதவி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி 31. இவர், இரு நிறுவனங்களின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார். இந்நிறுவனம் லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் வணிக ரீதியிலான ஒப்பந்தம் வைத்துள்ளது.

இதனையடுத்து மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர் சஞ்ஜீவ் குப்தா, கோஹ்லி மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி புகார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இவர், சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், கபில்தேவ் உள்ளிட்டோர் மீது இப்புகார் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) நன்னடத்தை அதிகாரி டி.கே. ஜெயின் கூறுகையில், ‘‘கோஹ்லி மீது ஆதாயம் தரும் இரட்டை பதவி புகார் வந்துள்ளது. இதுகுறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும். ஒருவேளை இது உண்மையானால், இதுகுறித்து பதிலளிக்க கோஹ்லிக்கு வாய்ப்பு வழங்கப்படும்,’’ என்றார்.

மூலக்கதை